Show all

இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

பெரிய பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் உட்பட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை, 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. இப்படியான அப்பாவித்தனமான அவலநிலையை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. 

16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவிற்கு தேசியமொழி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வி எழுப்பி விடை பெற்றால் புரிந்து விடும், 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை.

பெரிய பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் உட்பட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை, 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. இப்படியான அப்பாவித்தனமான அவலநிலையை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. 

அரசியல் கட்சித் தலைவர்கள், பேரறிமுகமான நடிகர்கள், ஏன் பேரளவான வழக்கறிஞர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை, 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. இப்படியான அப்பாவித்தனமான அவலநிலையை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. 

'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடும் விழுக்காட்டில் இருப்பது இந்தியாவின் துயரமே ஆகும்.

இந்தியாவின் அலுவல் மொழிகள்- அட்டவணை எட்டில் சொல்லப்பட்ட தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகள் என்பதாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்திய அரசிலமைப்புச் சட்டத்தில் ஹிந்தித்; திணிப்பு ஆர்வலர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்காக,  ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை பொது அலுவல் மொழியாக- பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் நிறுவ முடிந்தால்- நிறுவிக் கொள்ளலாம் என்கிற சட்டமும் வகுக்கப்பட்டது. 

ஆனால் அந்தப் பதினைந்து ஆண்டுகள் முடிந்து மேலும் அறுபது ஆண்டுகள் கடந்தும், ஹிந்தி திணிப்புக்கு ஒன்றிய அரசிலிருந்து கோடான கோடி தொகையைச் செலவழித்தும் ஹிந்திக்கு அந்த இடத்தை கொணர முடியவில்லை. ஆனால் அவ்வப்போது அந்த சட்டத்தின் பயனை நுகரலாமே என்கிற ஆர்வத்தில் வடஇந்திய ஹிந்தி வெறித்தலைவர்கள் பலரும் அப்படி இப்படி பேசி அடிக்கடி நூல் விட்டுப் பார்ப்பார்கள்.
 
அந்த வகையான ஒரு நூல்விடலாக- இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் அமித்சா பேசியிருந்தார்.

இந்த நிலையில் கன்னட நடிகர் கிச்சா சுதீப், ஹிந்தித்திரை நடிகர் அஜய் தேவ்கன் இடையே ஹிந்தி மொழி தொடர்பாக கீச்சு வழியாக நடந்த பரிமாற்றங்களில்; நடிகர் அஜய் தேவ்கன்னுக்கு 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. தெரியவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

அடிப்படை தெரியாத அந்த அம்மாஞ்சியின் மறுப்பை தீயாக்கி வருகிற எந்த ஊடக செய்தியாளர்களுக்கும், 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. தெரிந்திருக்க வில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மையை அறிந்திருக்கிற கன்னட நடிகர் கிச்சா சுதீப், தன்னைக் கொண்டாடும்; கன்னட மக்கள் அறிந்திருக்க வேண்டிய தன்மானச் செய்தியாக, 'ஹிந்தி தேசியமொழி இல்லை' என்று கீச்சுப் பதிவிட்டு கன்னட மக்களை விழிப்பூட்டியிருக்கிறார்.

'ஹிந்தி தேசியமொழி இல்லை' என்று அவர் தெரிவித்ததை மறுக்கும் வகைக்கு, ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், ‛சகோதரர் கிச்சா சுதீப், ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறீர்கள்?. ஹிந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தேசிய மொழியாக இருக்கும் என்று ஆதிக்க அடாவடி என்று கருதும் வகையான பதிவை மறுப்பாக்கியுள்ளார்.

இதற்கு கிச்சா சதீப், ஐயா, எனது பேச்சின் பொருள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இதுபற்றி நேரில் சந்திக்கும் போது உங்களுக்கு விளக்குகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. நீங்கள் ஹிந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் ஹிந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்தப் விடையை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்! அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? என்று தெரிவித்துள்ளார்.

அமித்சா பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 

ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாகவும், தேசிய மொழி என்றும் வைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து பொதுமக்களிடம் தான் கருத்து கேட்க வேண்டும். ஏனென்றால் நமது நாடு பல்வேறு மொழி, கலாசாரங்களை கொண்டது. இதனால் இதுபற்றி நான் எதுவும் இப்போது கூறப்போவது இல்லை. இதுபற்றி பிற மாநில முதல்வர்களோடு விவாதிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியிலும் பல்வேறு ஊடகங்கள் 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை தெரியாது சொதப்பி உள்ளதைக் காண முடிகிறது.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்கிற நூறு விழுக்காடு பொய்யான தகவலையும் இந்தியாவில் மிகப் பேரளாவாக நம்பியும், தொடர்ந்து ஹிந்தி தேசிய மொழி என்கிற வதந்தியோடு இந்த வதந்தியையும் சேர்த்து பரப்பி வருகின்றனர். 

நாளது 27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5121 (11.07.2019) அன்று இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்பது உண்மையா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய இணையமைச்சர் நித்யானந்த ராய் இல்லவேயில்லை என்பதாக விடைளித்துள்ளார்.

மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்திருந்த விடையாவது:
சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகம் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அங்கீகரித்து தேசிய விலங்கு தகுதி வழங்கியது. அதேபோல, தேசிய பறவையாக மயில் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு தேசிய பறவை தகுதி வழங்கப்பட்டது. ஆனால், அந்த அமைச்சகத்தின் சார்பில் தேசிய மலர் என்ற தகுதி இதுவரை எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை. அதற்கான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே தாமரை இந்தியாவின் தேசிய மலர் இல்லை என தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,233.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.