Show all

குஜராத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஒரு மாநிலக் கட்சி உருவாக்கவுள்ள தலைவர் ஜிக்னேஷ் மேவானி

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி தலையாய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட இவர் பல்லாயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். மிகவும் இளம் வயது அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கும் இவர் பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இனி குஜராத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் குஜராத்தில் எதிர்காலத்தில் நடக்க போகும் பல தலையாய அரசியல் மாற்றங்களுக்கு இவரும் காரணமாக இருப்பார். இந்த தேர்தல்தான் இவருடைய முதல் தேர்தல் என்றாலும் மக்கள் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்து இருக்கின்றனர்.

தற்போது தலையாய தலைவராக உருவாகி இருக்கும் இவர் 35 அகவை மட்டுமே நிரம்பியவர். சட்டம் படித்த இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தலித் மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் நடந்தி வருகிறார். டெல்லியில் ரோஹித் வெமுலா மரணம் அடைந்த போது இவர் நிறைய போராட்டங்கள் நடத்தினார். அந்த போராட்டத்தில் இருந்தே அரசியல் வெளிச்சம் இவர் மீது படத் தொடங்கியது. பாஜக தங்கள் அரசியல் லாபத்திற்காக கொண்டு வந்த பசு வதை தடை சட்டம் தான் இவரையும் வளர்த்தது. குஜராத்தில் பசு இறைச்சி சாப்பிட்டதாக அடிக்கடி சிலர் கொல்லப்படும் சம்பவம் நடந்தேறும். அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கினார். உனாவில் பசு வதை பெயரில் நடந்த மனித கொலைக்கு எதிராக 20,000 தலித் மக்களை கூட்டி பெரிய போராட்டம் நடத்தினார்.

இந்தப் போராட்டத்தை பெரிய பேரணியாக மாற்றி உனாவில் கொடி ஏற்ற முடிவு செய்தார். இவர்தான் போராட்ட கொடியை ஏற்றுவார் என்று எல்லோரும் நினைத்த போது ரோஹித் வெமுலாவின் அம்மாவை கூப்பிட்டு கொடி ஏற்ற வைத்தார். இந்த நிகழ்விற்கு பின் அவர் இந்தியா முழுக்க பேசப்பட்டார். இதன்பின் தான் அவர் குஜராத்தின் தலையாய தலைவர் ஆனார்.

குஜராத்தின் வட்காம் தொகுதியில் இவர் எப்படியும் வெற்றிபெற்று விடுவார் என்றே கூறுகிறார்கள். இப்போதே அவர் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். இதனால் இவர் எதிர்காலத்தில் குஜராத்தின் தலையாய தலைவர் ஆவார் எனக்கருதப் படுகிறது.

எப்படியோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் குஜராத்திற்கான ஒரு மாநிலக்;கட்சி உருவானால் சரி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,640

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.