Show all

வேளாண் கண்டுபிடிப்புக்கு அமெரிக்க பரிசு பெற்ற இந்திய மாணவர்

அமெரிக்க நாட்டில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பிரஷாந்த் ரங்கநாதன் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளார்.

     அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் இந்தியாவின் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த பிரஷாந்த் ரங்கநாதன் என்ற மாணவர் பங்கேற்றிருந்தார். விவசாயத்தை மேம்படுத்துவது சார்ந்த கண்டுபிடிப்பை போட்டியில் முன்வைத்த அவருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கப்பட்டது.

     இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். விவசாயத்தை அழிக்கும் பூச்சிக்கொல்லிகளை செயலிழக்கச் செய்யும் திட்டத்துடன் போட்டியை எதிர்கொண்ட பிரஷாந்த் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்பிற்கான பரிசை தன்வசமாக்கினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.