Show all

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள்; தமிழ் நாட்டுக்காரர் ஒருவரும் இல்லை

பிரபலமான போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவில் உள்ள 100 முன்னணி பணக்காரர்கள் அடங்கிய 2017 க்கான பட்டியலை ‘இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2017’

என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு 2 லட்சத்து 47 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஆகும்.

மோடியின் நண்பர் பதஞ்சலி நிறுவன இயக்குனர் பாபா ராம்தேவ் கடந்த ஆண்டு 48-வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இப்பட்டியலில் ஏழு பெண்கள் உள்ளனர். அவர்களில் 16வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பம் உள்ளது. ஜிண்டால் குழுமத்தின் சொத்து மதிப்பு 48 ஆயிரத்து 810 கோடி ரூபாய் ஆகும்.

அவரை தொடர்ந்து குப்தா குடும்பம் 22 ஆயிரத்து 452 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 40வது இடத்தில் உள்ளது. தேஷ் பந்து குப்தாவால், லூபின் என்ற மருத்துவம் சார்ந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த பட்டியலில் வினோத் மற்றும் அனில் ராய் குப்தா குடும்பம் 20 ஆயிரத்து 239 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 48வது இடத்தில் உள்ளது.

 

இந்து ஜெயின் மகன்களான சமீர் மற்றும் வினீத் நடத்தி வரும் பென்னட், கோல்மேன் அண்ட் கம்பெனி என்ற ஊடக நிறுவனத்தின் மதிப்பு 19 ஆயிரத்து 524 கோடி ரூபாய் ஆகும். இந்த குடும்பம் 51வது இடத்தில் உள்ளது.

இதேபோன்று உலகின் 3-வது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை டபே நிறுவனம் பெற்றுள்ளது. மல்லிகா ஸ்ரீனிவாசன் தலைமையிலான இந்நிறுவனம் 16 ஆயிரத்து 270 கோடி ரூபாய் மதிப்புடன் 63-வது இடத்தினை பிடித்துள்ளது.

ரெவ்லான் என்ற நிறுவனத்தினை தலைமையேற்று நடத்தி வரும் லீனா திவாரி 14 ஆயிரத்து 252 கோடி ரூபாய் மதிப்புடன் 71வது இடத்தினை பிடித்துள்ளார். இந்நிறுவனம் மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 1978-ம் ஆண்டு பயோகான் என்ற மருத்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மஜும்தார் ஷா என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் மதிப்பு 14 ஆயிரத்து 57 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் தன் முயற்சியால் முன்னணிக்கு வந்த பெண் என்ற பெருமையை பெற்றுள்ள ஷா தொடங்கிய இந்நிறுவனம் 72-வது இடத்தில் உள்ளது. ஆசியாவின் மிக பெரிய இன்சுலின் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை மலேசியாவின் ஜோஹர் பகுதியில் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

தமிழ் நாட்டுக்காரர் ஒருவரும் பட்டியலில் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.