Show all

எல்லைக்கடவு பெறுவதற்கு சாதுக்கள் தங்கள் குருவின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

 

 

     எல்லைக்கடவு பெறுவது தொடர்பான சில கட்டுப்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தளர்த்தியுள்ளது.

     சாதுக்கள் தங்கள் பெற்றோரின் பெயருக்கு பதிலாக குருவின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

     1989 சனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் அளிக்க வேண்டியதிருந்தது. பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பிறப்பை பதிவு செய்ய அனுமதி பெற்று, புதிதாக பிறப்புச் சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டியதிருந்தது. இனி எல்லைக்கடவு பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாய மில்லை. அதற்குப் பதிலாக பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு  பாலிசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

     திருமணமானவர்கள் தங்களது திருமணச் சான்றிதழை விண்ணப்பத்தின்போது அளிக்க தேவையில்லை.   

     அடையாள அட்டை, தடையில்லா சான்றிதழ் பெற முடியாத அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலக பரிந்துரை கடிதத்துடன் சுய சான்றை இணைத்து எல்லைக்கடவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.