Show all

தமிழகத்தில், கும்கி பயிற்சி பெற்றுவரும் கேரள நீலகண்டன், சுரேந்திரன், பெண் யானை சுரஜா மூன்றும் பயிற்சி முடிந்து அடுத்தமாதம் தாயகம் திரும்பும்

27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த யானைகளுக்கும் நீட் தேர்வெல்லாம் கிடையாது. எந்த மாநிலத்து யானைகளும் வந்து பயிற்சி பெற்றுச் செல்லலாம்!

இந்தியாவிலேயே, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் தான் யானைகள் எண்ணிக்கை அதிகம். கேரள கோயில்களில் யானை வளர்ப்பு என்பது சர்வசாதாரணமான ஒன்று. அத்துடன் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நாசம் செய்வதும் கேரளாவில் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் காட்டு யானைகளால் சேதமடைந்தன. 

இச்சூழ்நிலையில், காட்டு யானைகளை விரட்ட, கும்கி யானைகளைப் பயன்படுத்துவது என்ற முடிவை கேரள வனத்துறை எடுத்துள்ளது. ஆனால், கும்கி பயிற்சி அளிக்க கேரளாவில் யாரும் இல்லை. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள், தமிழ்நாட்டில் உள்ள முதுமலை சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

முதுமலையில், நீலகண்டன் அகவை 17, சுரேந்திரன் அகவை 18, பெண் யானை சுரஜா அகவை 14 ஆகிய மூன்று கேரள யானைகளுக்கு, கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி முடிந்து இந்த மூன்று யானைகளும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் பயிற்சி அளிக்கப் படுவது குறித்து கேரள வனத்துறை அமைச்சர் ராஜு

அவர்கள் கூறுகையில், கேரளாவில், கும்கி பயிற்சி அளிக்கும் அளவுக்கு உகந்த சூழ்நிலை இல்லை. அத்துடன், கேரள வனத்துறையிலும் அந்த பயிற்சி அளிக்கும் நிபுணர்கள் இல்லை, அதனால் தமிழக கும்கி பயிற்சி நுட்பத்தைப் பயன் படுத்திக் கொள்கிறோம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,877.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.