Show all

குசராத்தில் இசை கச்சேரியில் பாடகி மீது ரூ.10 ரூ20 ரூபாய் தாள்களை வீசி மகிழ்ந்த ரசிகர்கள்

 

 

     குசராத்தில் இசை கச்சேரியில் பாடகி மீது ரூ.10 ரூ20 ரூபாய் தாள்களை ரசிகர்கள் அள்ளி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து ரூ.1000, ரூ.500 தாள்கள் ஒழிக்கப்பட்டு விட்டன.

     இதன் காரணமாக வங்கிகளிலும், திறந்துள்ள ஒரு சில எடுக்கலாம் பணம் எந்தநேரங்களிலும் (எபஎ) மையங்களிலும் ரூ.2 ஆயிரம் தாள்களே வினியோகிக்கப்படுகின்றன. ரூ.1,000, ரூ.500 தாள்கள் ஒழிக்கப்பட்டு விட்டதால், குறைந்த மதிப்பிலான ரூபாய் தாள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ரூ.2 ஆயிரம் தாள்களுக்கு சில்லரை மாற்றுவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறி உள்ளது.

     இந்நிலையில் குசராத் மாநிலம் நவ்சாரியில் குசராத் காசாத்ரியா காதியா என்ற அமைப்பு ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. அதில் அம்மாநில பாடகர்கள் பரிதா மிர், கிர்த்திதன் காத்வி ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினர்.

     இறுதியில் இசைக்கச்சேரியின் முடிவில் பாடகியர் மீது அங்கு குவிந்த ஆண்களும், பெண்களும், 10மற்றும்20 ரூபாய் தாள்களை அள்ளி வீசினர். இவ்வாறு வீசப்பட்ட ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.40 லட்சம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாய் பரவி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.