Show all

திருப்பதி கோயில் உண்டியல் வசூலிலும் காகித பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பதி கோயில் உண்டியல் வசூலிலும் காகித பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் வெளிப் பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வசூலாகி இருந்த 1046.28 கோடி ரூபாயை விட, கடந்த ஆண்டில் 50.39 கோடி ரூபாய் குறைவாக வசூலாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியல் மூலம் ரூ.995.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் வசூலாகும். இது தவிர பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கும் ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி மி.ஒப்பந்தம் மூலமாக ஏலம் விடப்படும்.

இந்நிலையில், கடந்தாண்டு சுமார் 2.73 கோடி பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 10.66 கோடி ரூபாய்க்கு லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,659

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.