Show all

இந்தியாவின் தேசியத் தலைவராக மிளிர்ந்து வருகிறார், கமல்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து பயங்கரவாதம் இருப்பதை வலதுசாரி அமைப்புகளால் மறுக்க முடியாது என்று கருத்து கூறியதால் ஹிந்துக்களின் மனதை நடிகர் கமல்ஹாசன் புண்படுத்தி விட்டதாக உத்தரப் பிரதேச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில் ‘ஹிந்து பயங்கரவாதம் இருப்பதை வலதுசாரி அமைப்புகளால் மறுக்க முடியாதுஎன்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றம்சாட்டி, வாராணசியில் உள்ள கூடுதல் தலைமைப் பெருநகர அறங்கூற்றுமன்றத்தில் வழக்குரைஞர் கமலேஷ் சந்திர திரிபாடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘கமல் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 500, 522, 298, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிககை எடுக்க உத்தரவிட வேண்டும். நடிகர் கமலைப் பின்பற்றுவோர் அதிக அளவில் உள்ளதால் இதுபோன்ற கருத்தை அவர் தெரிவிக்காமல் இருக்கத் தடை விதிக்க வேண்டும்என்று திரிபாடி கோரியுள்ளார். இந்த மனுவை அறங்கூற்றுமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அது இன்று விசாரணைக்கு வரும்.

கமலின் கருத்துக்களும், எதிர்தாக்குதல்களும் தேசிய அளவில் அமைந்து, அவர் இந்தியாவின் தேசியத் தலைவராக மிளிர்ந்து வருகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.