Show all

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.

வெறும் இலவயங்கள் மூலமாக மட்டுமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய தொலைத்தொடர்புச் சேவைப் பிரிவான ஜியோ சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

     இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி முதல் ஜியோவின் இலவசங்கள் முடிவிற்கு வருவதால் ஜியோ மார்தட்டிக்கொள்ளும் 100 மில்லியன் வாடிக்கையாளர் பாதியாகக் குறையும் என தலையாய ஆய்வு கூறுகிறது.

     ஜியோவின் அறிமுகம் மற்றும் அதன் இலவச திட்டங்களால் கடுப்பான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆய்வின் மூலம் மகிழ்ச்சியை அடைந்துள்ளன.

     இதுவரை ஜியோ நிறுவனம் தனது வர்த்தகத்தைத் துவங்கி 6 மாதங்கள் முழுமையாக முடிந்த நிலையில் ஒரு ரூபாய் கூட இன்னும் வருமானமாகச் சம்பாதிக்கவில்லை, காரணம் தொடர் இலவசம்.

     இந்நிலையில் நாங்களும் இனி வருமானத்தை ஈட்டுவோம் என தனது இலவசங்களை மார்ச் 31 உடன் முடித்துக்கொண்டு ஏப்ரல் 1 முதல் வருமானத்தை ஈட்டத் துவங்குகிறது ஜியோ.

     ஜியோவின் 100 மில்லியன் வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டு பேர் வெறும் இலவசங்களுக்காக மட்டுமே ஜியோவின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

     இந்த 6 மாதத்தில் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் கணிசமான அளவிலேயே குறைந்துள்ளதை வைத்துக் கூறப்படுகிறது.

     இந்நிலையில் இதுவரை ஜியோ நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து வாடிக்கையாளர்களும் இணையச் சேவையை மட்டுமே ஜியோவில் பயன்படுத்தி வருகின்றனர்.

     மேலும் தலையாய இணையவழி அழைப்புகளை, ஜியோவில் இலவமாக இருந்தாலும், தங்களது பிற தொலைத்தொடர்பு இணைப்பில் இருந்துமட்டுமே செய்து வருகின்றனர்.

     ஜியோ நிறுவனத்தின் சேவைகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சரியாகக் கிடைக்காத நிலையில், மார்ச்31ஆம் தேதி முதல் இலவசங்கள் நீக்கப்படுவதால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பாதியாகக் குறையலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.