Show all

செப்டம்பர் 20முதல் 24வரை பிளிப்கார்ட் வழங்கும் பிரமாண்ட தள்ளுபடி விற்பனை

செப்டம்பர் 20முதல் 24வரை பிளிப்கார்ட் வழங்கும் பிரமாண்ட விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் மிடுக்குப்பேசிகளை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு, உள்ளிட்ட பல சிறப்பு சலுகைகளை எஸ்பிஐ வங்கி கடன் மற்றும் இருப்பு அட்டை பயனர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், மோட்டோ, ஆசஸ், மைக்ரோமேக்ஸ், பானாசோனிக், இன்பினிக்ஸ் போன்ற மிடுக்குப்பேசிகளுக்கு தள்ளுபடி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் 4 ப்ரோ மிடுக்குப்பேசி மாதிரிக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும்.

பானாசோனிக் பி85 மிடுக்குப்பேசி முந்தைய விலை ரூ.6,499ஆக இருந்தது, இந்த மிடுக்குப்பேசிக்கு விலைக் குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஸ்வைப் எலைட் சென்ஸ் மிடுக்குப்பேசியின் முந்தைய விலை ரூ.7,499ஆக இருந்தது, இந்த மிடுக்குப்பேசிக்கு விலைக் குறைக்கப்பட்டு ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும்.

யுனிக் 2 மிடுக்குப்பேசிக்கு ரூ.500 விலைக் குறைக்கப்பட்டு ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஆன்5, சாம்சங் கேலக்ஸி ஆன்7, சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ, போன்ற மிடுக்குப்பேசி மாதிரிகளுக்கு ரூ.7000 வரைவிலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் பல்வேறு மிடுக்குப்பேசி மாதிரிகளுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.