Show all

அமெரிக்கஅதிபர் டொனால்டு டிரம்பு வருவாரா! மாட்டாரா? இந்தியக் குடியரசு நாள் விழாக் கொண்டாட்டத்திற்கு

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்தாண்டு நடக்க உள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, தலைமமைஅமைச்சர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது. அண்மையில், 'பணி நெருக்கடி காரணமாக, இந்தியக் குடியரசு நாள் விழாவில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க மாட்டார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று, 'குடியரசு நாள் விழாவில் பங்கேற்கும்படி, நடுவண் அரசு சார்பில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.