Show all

தொடரும் பிழைகள்! ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மீண்டும் மீண்டும்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 ஆண்;டுகஷகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தமிழக அமைச்சரவையில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய கூடாது என்று, அந்த சம்பவத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர், அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்தனர். அந்த வழக்கு குறித்து நடுவண் அரசின் பதிலை உச்சஅறங்கூற்றுமன்றம் கேட்டிருந்தது. நடுவண் அரசு பதிகை செய்த பதில் மனுவில் பல்வேறு பிழைகள் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இன்று உச்சஅறங்கூற்றுமன்றம் இந்த வழக்கை மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஒத்திவைத்துள்ளது.

நடுவண் அரசின் பல்வேறு பிழைகள்: முற்றாகவே ராஜிவ் காந்தி கொலை வழக்கை திசை திருப்பினால்- 

1.அந்த ஏழு பேரை 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விட்டதான அனுதாபத்தில் விடுவிக்க வேண்டிய தேவையிருக்காது

2.இந்த பதினான்கு குடும்பத்தார், அந்த ஏழு பேர்களை விடுவிக்க வேண்டாம் என்று வழக்கு தொடுப்பதற்கான தேவையும் எழாது.

3.தமிழர்கள் தர்ம சங்கடத்தில் நெளியும் தேவையும் இருக்காது.

4.ராஜிவ் காந்தி கொலையின் உண்மையான குற்றவாளிகளை வெளிக் கொணர்வதற்குமான வாய்ப்பும் ஏற்படும்.

5.ஒட்டு மொத்தத்தில் இராஜிவ் கொலையின் மர்ம முடிச்சு அவிழ்க்கப் படும் என்கிறார் திருச்சி வேலுச்சாமி அவர்கள்

ராஜீவ் கொலை வழக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் சக்திகள் குறித்து, 'ராஜீவ் காந்தி கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்!' என்ற தலைப்பில் ஏற்கெனவே புத்தகம் எழுதி இந்த விளக்கங்களை அந்த நூலில் தெளிவாக வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,022.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.