Show all

தூய்மை இந்தியா சாத்தியம் ஆகாததற்கு காரணம் 125 கோடி இந்திய மக்களே: மோடி குற்றச்சாட்டு

இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.

ஆயிரம் மகாத்மா காந்தி, ஒரு லட்சம் மோடி அல்லது அனைத்து மாநில முதல்வர்கள் என யாராலும் தூய்மையான இந்தியா சாத்தியம் ஆகாது. இது 125 கோடி இந்திய மக்களால் மட்டுமே சாத்தியம் ஆகும். என்று பேசினார்.

குஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது,

கழிவறையில் ஆடுகள் கட்டி வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்காக மக்களை நான் குற்றம் சொல்லவில்லை. நமது மனநிலை அவ்வாறு உள்ளது. அதை மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குகொள்ள வேண்டும். குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றவர்களைக் கழிவறைகளைப் பயன்படுத்துமாறு நிர்ப்பந்திக்க வேண்டும். அதன் மூலம் நம் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் எனப் பேசினார்.

கழிப்பிடத்தில் ஆடுகளை ஏன் பாமர மக்கள் கட்டி வைக்கவேண்;டும்? அம்பானிகள் அந்த வேலையைச் செய்வானா?

நீங்கள் அவர்களை குற்றவாளிகளாக கட்டிவிட்டு அம்பானிகள் வாழ வழி வகுத்துக் கொண்டிருந்தால் என்ன நியாயம்?

நக்கி பிழைக்கும் இந்திய ஊடகவியலாளர்கள் உங்கள் இந்தக் கேவலமான பேச்சையும் பெருமையாகப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தம் குழந்தைகளைப் பெருமையாகப் பேசுகிற பெற்றோர் நல்லக் குடும்பத்தை கட்டமைக்க முடியுமா?

தம் குழந்தைகளைப் குறைபட்டுக் கொள்கிற பெற்றோர் நல்லக் குடும்பத்தை கட்டமைக்க முடியுமா?

அடிப்படையே சரியில்லையே மோடி?

நீ இந்தியாவை இன்னும் எவ்வளவு சீரழிக்கப் போகிறாய் என்று தெரியவில்லையே மோடி?

என்று வாக்களித்த மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.