Show all

குஜராத்தில் பா.ஜ.க. நகராட்சிமன்ற உறுப்பினரைக் கட்டி வைத்து உதைத்த மக்கள்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் சில குடிசைகள் கட்டப்பட்டு அதில் சிலர் வசித்து வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி அந்த குடிசைகளை நேற்று இடித்து தள்ளினர்.

மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்த பா.ஜ.க. மாநகராட்சிமன்ற உறுப்பினரை ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதம் செய்தனர். முன் அறிவிப்பு செய்யாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.

குடிசைகளை இடிப்பது குறித்து தனக்கு எந்த சம்பந்தம் இல்லாதது போல் அவர் நடந்து கொண்டதால்,

ஆத்திரமடைந்த மக்கள் ஹஸ்முக் படேலை தாக்கத் தொடங்கினர். அதன்பின்னர் அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் அடங்கிய காணொளி அப்பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவியது.

இதை தொடர்ந்து, பா.ஜ.க. மாநகராட்சிமன்ற உறுப்பினரை தாக்கியது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 30க்கு மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. மாநகராட்சிமன்ற உறுப்பினரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.