Show all

பாஜக அதிரடி! தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கர்நாடக தேர்தல் நாள் கீச்சில் பதிவு

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை தேர்தல் ஆணையர்  ஓம்பிரகாஷ் ராவத்  இன்று டெல்லியில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை அறிவித்தார்.  அவர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போதே  தேர்தல் ஆணையர் தேர்தல் நாளை அறிவிக்கும் முன்னரே  ஊடகங்களில் தேர்தல் நாள் மே 12 (29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120) என தகவல் வெளியானது. இது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கர்நாடக தேர்தல் நாளை கீச்சில் பதிவிட்டு இருந்தார் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா! 

தேர்தல் நாள் அறிவிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இவர் தேர்தல் நாளை அறிவித்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.