Show all

பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு ஆப்பு

பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹெமன்த் பாட்டீல் மும்பை உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரை மலர் பறைசாற்றப்படுவதை ரத்து செய்யவேண்டும் என பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:

     தேர்தல் ஆணையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தாமரை மலரை தன் கட்சியின் சின்னமாக பா.ஜனதாவிற்கு அனுமதி அளித்தது. அப்போது இதற்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இருப்பினும் தாமரை ஒரு புனிதமான மலராகவும், தனித்தன்மை வாய்ந்த மலராவும் நம் புராண இதிகாசங்களில் போற்றப்படுகிறது. மேலும் நம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு மங்கலகரமான மலராகவும் கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் தாமரை மலர் செல்வம், செழிப்பு போன்றவற்றிற்கு அடையாளமாக திகழ்கிறது. இதேபோல் தூய்மை, சாதனை, நீடித்த வாழ்வு மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகிவற்றை எடுத்துரைக்கும் அடையாளமாகவும் தாமரை மலரை கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக தாமரை நம் தேசிய மலராகும்.

எனவே தாமரையை ஒரு கட்சியின் அடையாளமாக பயன்படுத்துவது தவறாகும். எனவே பா. ஜனதா கட்சியின் சின்னமான தாமரை மலர் பயன்படுத்தப்படுவதை முறையற்ற பயன்பாட்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்யவேண்டும். ஏற்கனவே தேர்தல் ஆணையத்;திடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.