Show all

ஏர்செல் திவால் என்பது பாதி சரி, பாதி தவறு, கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது: செயல் அதிகாரி

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்பேசி சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரும்பாலான கோபுரங்கள் இயங்காததால், சைகை கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் செல்பேசி மூலம் மற்றவர்களிடம் பேச முடியாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

செல்பேசி மூலம் முதன்மைத் தகவல்கள், அவசர செய்திகள் பரிமாற, ‘ஏர்செல்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

எனவே சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள ஏர்செல் மையங்களுக்கு பொதுமக்கள் சென்று முறையிட்டனர். எனினும் முறையான விளக்கம் கிடைக்காததால் ஊழியர்களுடன் வாக்குவாதமும் நடந்தது.

இந்த நிலையில் ஏர்செல் வேலை செய்யாததால் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மூடப்பட்டிருக்கும் அலுவலகத்தின் மீது கற்களை வீசி வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முடங்கி உள்ள ஏர்செல் சேவை, சரியாக 4 நாட்கள் ஆகும் என தென் இந்திய தலைமை செயல் அதிகாரி, பேட்டி அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது, வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு, கூடிய விரைவில் மாறுவதற்கான போர்ட் எண் கிடைக்கும், 

ஏர்செல் திவால் என்பது பாதி சரி, பாதி தவறு, கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,706 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.