Show all

ஒரு புதிய 500, 2000 ரூபாய் தாள் அச்சடிக்க ஆகும் செலவு என்ன? நடுவண் அரசு பதில்

ஒரு புதிய 500, 2000 ரூபாய் தாள் அச்சடிக்க ஆகும் செலவு என்ன என்பதை நடுவண் அரசு மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளது.

     கடந்த ஆண்டு நவம்பர் மாதம்-

தொடக்கதில், கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்றும் தொடர்ந்து பலபல காரணங்களைக் கண்டு பிடித்தும் சொல்லப்பட்டு,

நடுவண் அரசு புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தது.

     இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை நடுவண் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ள நடுவண் நிதி துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,

ஒரு புதிய 500 ரூபாய் தாளை அச்சடிக்க ஆகும் தோராயமான செலவு ரூ. 2.87 முதல் ரூ. 3.09 வரையில் இருக்கும்.

புதிய 2000 ரூபாய் தாளை அச்சடிக்க ஆகும் தோராயமான செலவு ரூ. 3.54 முதல் ரூ. 3.77 வரையில் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

     புதிய ரூபாய் தாளகளை அச்சடிக்க ஆகும் செலவு தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு இவ்வாறு அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்து உள்ளார். பொதுமக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் தொடர்ந்து புதிய ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்து உள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.