Show all

ஆதார் மோசடியைக் கண்டுபிடித்த இதழியலாளர் கைது! என்னங்கடா நடக்குது இங்கே

23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என்று நடுவண் அரசின் ஆட்சியில் உள்ள பாஜக அரசு பீற்றி வந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்று தற்போது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

இதழியலாளர் ஒருவர் நடத்திய கெத்து அதிரடியில் இந்த உண்மை தெரியவந்து இருக்கிறது. ஆனால் காவல்துறை உரிய மோசடி நபர்களை பிடிக்காமல், தற்போது அந்த இதழியலாளரைபக் கைது செய்து இருக்கிறது.

‘ஆப்ரேஷன் ஆதார் என்று தி டிரிபியூன் என்னும் ஆங்கில இதழ் நடத்திய அதிரடியில் தான் இந்த உண்மை வெளியே வந்து இருக்கிறது. யாருடைய ஆதார் விவரம் கேட்டாலும் கொடுக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்று பஞ்சாப்பில் இயங்கி வந்து இருக்கிறது. அந்த குழுவில் இந்த இதழைச் சேர்ந்த ராச்னா கைரா எனபவர் அதிரடிக்காக சேர்ந்து இருக்கிறார். அதன் மூலம் அவர் ஆதார் மோசடியைக் கண்டுபிடித்தார். அவர் கொடுத்த 800 ரூபாய் பணத்திற்கு அவருக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து நபர்களின் ஆதார் விவரங்களையும் பெறக்கூடிய வகையில் கடவுச்சொல், மற்றும் அடையாளப்பெயர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயம் வெளியில் தெரிந்து பிரச்சனை ஆனது. இதனால் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் கொதித்தன. அனைவரும் ஆதார் அமைப்பிற்கும், மோடி அரசிற்கும் எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கினர். இது தேசிய அளவில் பிரச்சனை ஆனது. மேலும் இன்னும் நிறைய குழுக்கள் இப்படி செயல்படுவதாக கூறப்பட்டது பீதியை கிளப்பியது.

தற்போது காவல்துறை ராச்னா கைரா மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. மூன்றிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய இதழியலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முதலில் இந்த மோசடியைச் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,660

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.