Show all

10 ஆயிரம் ரூபாய் அபராதம்! எதற்கு? எங்கே? ஏன்?

கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது டெல்லியில். மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவிலேயே காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக டெல்லி மங்கி வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிக முதன்மையான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே காற்றை மாசுபடுத்தும் வகையிலான பழைய மற்றும் பழுது வண்டிகள் இயங்குவதைத் தடுப்பதற்காக, டெல்லியில் மிக கடுமையான விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 

'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களை கண்டறிவதற்காக டெல்லி அரசு தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் விற்பனை நிலையங்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அங்கு எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களை அவர்கள் பரிசோதிக்கின்றனர். 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இருந்து விட்டால் சிக்கல் இல்லை. ஒருவேளை இந்தச் சான்றிதழ் இல்லாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. 

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் அனைத்து வாகன உரிமையாளர்களும் மாசு உமிழ்வு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை நாங்கள் சோதனை செய்து வருகிறோம். இதன் மூலம் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம். டெல்லியில் அனைத்து வாகனங்களுக்கும் 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு நாங்கள் அபராதம் விதித்து வருகிறோம். இங்கு நிறைய வாகனங்களுக்கு 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லை. 

முதற்கட்ட நடவடிக்கையின்போது, 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களின் இந்த கோரிக்கைக்கு நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து பலர் 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாமலேயே வாகனங்களை இயக்கினர். எனவே தற்போது இரண்டாவது கட்ட நடவடிக்கையில் நாங்கள் இறங்கி விட்டோம். 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அனைத்து வாகன உரிமையாளர்களும் 'கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருப்பார்கள் என நம்புகிறோம், என்று தெரிவித்தார்.

10 ஆயிரம் ரூபாய் என்பது கடுமையான அபராதம்தான். ஆனால் இதற்கு பயந்து கொண்டு வாகன உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்பது போக்குவரத்து துறை அதிகாரிகளின் எதிர்பார்ப்பு ஆகும். 

இதுதவிர மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் காற்று மாசுபாடு சிக்கலைக் குறைப்பதற்கு டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கும் வாகன கொள்கையின் கீழ், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குபவர்களுக்கு டெல்லி அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. 

டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கொள்கை அளவில் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் நடைமுறையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கான சிறப்பான தொழில் நுட்பம் இன்னும் உலக அளவில் கூட சாத்தியமாக்கப்படவில்லை என்பதே உண்மை. 

ஒரே காரணம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான மின்சாரத்தை அதிக நேரம், அதிக தூரத்திற்கு பயன்படுத்த வேண்டுமானால் மின்கலன்களை பெரிது படுத்த வேண்டும். அல்லது உதிரி மின்கலன்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது மின்கலன்களை மாற்றிக் கொள்ளும் மையங்களை நாடு முழுவதும் அரசு அமைத்துத் தரவேண்டும். மணிக்கணக்கில் வண்டியை நிறுத்தி மின்கலத்தில் மின்னேற்றம் எல்லாம் ஆங்காங்கே செய்து கொண்டிருக்க முடியாது.

மின்சாரம் என்பது ஒரு இயக்கமே அன்றி, பெட்ரோல் டீசல் போல பொருள் அல்ல. அதனால் மின்சாரத்தை சேமிக்க எல்லாம் முடியாது. மின்கலங்களில் மின்சக்தியை வேதியியல் சக்தியாக மாற்றி வைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் கூடுதல் மின்சாரத் தேவைக்கு கூடுதல் மின்கலங்கள் அல்லது உதிரி மின்கலன்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். இதனாலேயே கொள்கை அளவில் ஒன்றிய அரசும் மாநில அரசும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு முயன்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லாமல் பெட்ரோல் டீசல் விலை இவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு வருவதற்கு தடுமாறிக் கொண்டே இருக்கின்றார்கள். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,042.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.