Show all

சேலத்தில் நடந்து வரும், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு! உதயநிதி ஸ்டாலின் கதைத்தலைவனாக நடிக்கிறார்

பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ்  தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ்  தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்க இருக்கிறார்.  இது அரசியல் திகில் திரைப்படமாக உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சேலம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதில் உதயநிதி ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா அருகே புல்லட் துள்ளுந்தில் செல்லும் காட்சி முகநூல், கீச்சு போன்ற சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,189.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.