Show all

‘இப்படை வெல்லும்’ படத்திற்கு மெர்சலுக்குத் தந்த விளம்பரம் தருமா? பாஜக காமெடிகுழு

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எதிர்வரும் வியாழனன்று உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘இப்படை வெல்லும்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலரும் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள்.

‘இப்படை வெல்லும்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் உதயநிதி ஸ்டாலின், மெர்சல் படத்திற்கு முழு விளம்பரம் கொடுத்தது பாஜகதான். அதேபோல் என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையைப் பேச வைக்கலாம்னு நினைக்கிறேன்

என்று தெரிவித்தார்.

இச்செய்தி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவ, பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது கீச்சு பக்கத்தில், ‘ஒன்னும் பிரயோசனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் பதிலால் இயக்குநர் கவுரவ் மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது கீச்சு பக்கத்தில்,

ஹெச்.ராஜா ஐயா! தங்களுடைய விளம்பரப்படுத்துதலுக்கு நன்றி. எங்களுடைய முழு குழுவும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கலக்குங்க ஐயா. கவுத்துறாதீங்க! என்று தெரிவித்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.