Show all

தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை! கங்கனா ரனாவத் சொல்லும் காரணம்

பேரறிமுக நடிகையான கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் சொல்லும் காரணம் என்ன? தொடர்ந்து படியுங்கள் செய்தியை

30,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: கங்கனா ரனாவத்; ஹிந்தி திரைப்பட நடிகையும் தோற்றக்கலை அழகியுமாவார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இவர், கடந்த பதினாறு ஆண்டுகளாக ஹிந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். 

கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பேரறிமுக நடிகையான கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை தெரிவித்துள்ளார். 

கங்கனா ரனாவத் அதிரடி கதைத்தலைவியாக நடித்துள்ள தாகத் படம் அடுத்த கிழமை வெளியாகிறது. நிகழ்ச்சி ஒன்றில் படம் குறித்து பேசிய போது, படத்தை போன்று நடப்பு வாழ்க்கையிலும் நடந்துக்கொள்வீர்களா என வினா எழுப்பப்பட்டது. 

இதற்கு விடையளித்த கங்கனா, நடப்பில் யாரை என்னால் அடிக்க முடியும், 'இதுபோன்ற வதந்திகளால் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை' என சிரித்தப்படி விடையளித்தார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,247.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.