Show all

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இல்லை என்கிற செய்தி தலைப்பாகி வருகிறது!

இந்த முறை வேறுபாடாக யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பதாக ஒரு பேரறிமுகம் குறித்த செய்தி தலைப்பாகி வருகிறது. 

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொரு முறையும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரக் காணொளி வெளியாகும் போதெல்லாம், இந்த முறை யார் யாரெல்லாம் போட்டியாளர்கள் என்கிற யூகம் பேசுபொருளாகி அது தலைப்பாகும்.

இந்த முறை வேறுபாடாக யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பதாக ஒரு பேரறிமுகம் குறித்த செய்தி தலைப்பாகி வருகிறது. 

ஒவ்வொரு பிக் பாஸ் பருவத்திலும் தனது பெயர் அடிபடுவதாக நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கீச்சுவில்  தெரிவித்துள்ளார்.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரி தலைப்பை வென்றார். 

இந்நிலையில் பிக் பாஸ் பருவம் 5 விரைவில் தொடங்கவிருக்கிறது. இதையடுத்து அண்மையில் இதன் விளம்பரக் காணொளியும் வெளியானது. கடந்த 4 பருவங்களைப் போல, இந்தப் பருவத்தையும் நடிகர் கமல் காசனே தொகுத்து வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் 5-ம் பருவத்தில் கலந்துக் கொள்ளும் பேரறிமுகங்கள் குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு பிக் பாஸ் பருவத் தொடக்கத்தின் போதும், தனது பெயர் அடிபடுவதாக, நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கீச்சுவில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு பருவத்திலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக் பாஸ் தமிழ் 5-ம் பருவத்தில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,70,999.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.