Show all

ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

ஆரண்ய காண்டம் புகழ் குமாரராஜா-வின் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

முதலில் இப்படத்துக்கு அநீதிக் கதை என்று பெயரிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றிலும் தொடர்பே இல்லாமல், சூப்பர் டீலக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் பெண் வேடமிட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, நதியா, பஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, பகவதி போன்றோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவாளர்கள் - வினோத் ரூ நிரவ் ஷா. இயக்குநர்கள் மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சேகர் ஆகியோர் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார்கள். கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் போன்ற பொறுப்புகளை குமாரராஜா ஏற்றுக்கொண்டுள்ளார்

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.