Show all

நயன்தாரா நடித்ததிலேயே அவருக்கு மனநிறைவு அளிக்காத படம்?

முருகதாசின் கஜினி படத்தில் நடித்ததுவே, தான் செய்த தவறு என கூறியுள்ள நயன்தாரா- படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது என்று கூறியுள்ளார்.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகை நயன்தாரா நீண்ட காலமாக தமிழ்த் திரையுலகின் வெற்றி நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முனனணி கதைத்தலைவர்களுக்கு இணையாக நடிப்பது மட்டுமல்லாமல். தனிக்கதைத் தலைவியாக படங்களில் நடித்தும் வெற்றி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் திரைப்பயணத்தில் செய்த தவறு பற்றி பேசியுள்ளார். முருகதாசின் கஜினி படத்தில் நடித்ததுவே, தான் செய்த தவறு என கூறியுள்ள அவர், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது என்று கூறியுள்ளார். அதற்குப்பிறகு நான் கதைகளை மிக கவனமாக கேட்க தொடங்கி விட்டேன் எனவும் நயன்தாரா தெரிவித்துள்ளார் 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,327.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.