Show all

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு மாற்றங்கள்

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் நிகழ்ச்சி, திட்டமிட்டபடி 100 நாட்கள் நிகழும் என்றால் வரும் திங்கட் கிழமையன்று பிக் பாஸ் முடிவடைய வேண்டும். ஆனால், நிகழ்ச்சி மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், திங்கட் கிழமை இரவு 9 மணிக்கு அரண்மனை கிளி என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக, ஓட்டக்காலா ஓட்டக்காலா என்று விளம்பரம் ஒளிபரப்பிக் கொண்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. அப்படியானால் பிக் பாஸ் நிகழ்ச்சி? விஜய் தொலைக்காட்சி தரப்பில் கடைசி ஒரு கிழமை மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9.30-க்கு என மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,914.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.