Show all

நடப்பு இரண்டு மாதங்கள் அமெரிக்காவில்! தோட்டத்துக்கே சென்று நம் கையால் ஆப்பிள் பறித்து சாப்பிடும் சுக அனுபவம்; போலாமா

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோடையில் நம் மக்கள் மாம்பழம் சாப்பிட்டு கொண்டாடுவது போல அமெரிக்காவில் குதூகலமாக ஆப்பிள் சாப்பிடும் காலம் நடப்பு இரண்டு மாதங்கள். 

இதை ஒரு வித்தியாசமான முறையில் மக்கள் கொண்டாடுகிறார்கள். அது வழக்கம் போல கடையில் வாங்கி சாப்பிடுவது போல அல்லாமல் ஆப்பிள் தோட்டத்துக்கே சென்று தம் கையால் பறித்து சாப்பிடும் சுக அனுபவம். அப்படியான ஒரு அழகான அனுபவத்தை உங்களோடும் பகிர்ந்துகொள்ள இதோ ஆரம்பிக்கிறது ஆப்பிள் தோட்டத்து பயணம். 

ஆப்பிள் அதிக விளைச்சல் உள்ள இடங்களில் ஆப்பிள் தோட்டங்களில் நடப்பு இரண்டு மாதங்கள் வரை ஆப்பிள் தோட்டங்கள் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கிறது. நுழைவு சீட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து டாலருக்கு வாங்கி விட்டால் போதும். அப்புறம் நம் கையில் ஒரு கூடை கிடைத்து விடும். அப்புறம் ஆப்பிள் தோட்டத்துக்கு சொகுசாக ஒரு டிராக்டர் வண்டியில் ஏறி பயணிக்கலாம்.

அப்படியே அந்த டிராக்டர் வண்டி நம்மை ஆப்பிள் தோட்டத்துக்கு அழைத்து சென்று விடும். நம் விழிகள் கொத்து கொத்தாக காத்திருக்கும் ஆப்பிள் மரங்களை கண்டு அகல திறக்கும். நம் கையால் ஆப்பிளை பறித்து அந்த கூடையில் நிரப்பி விட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பலாம். அப்படியே அங்கேயே ஒரு கடி கடித்து ஆப்பிளின் சுவையில் நம்மை மறக்கலம்.

எப்போதும் எல்லா பருவங்களிலும் கடைகளில் ஆப்பிள் கிடைத்தாலும் ஆப்பிள் பருவத்தில் வரும் ஆப்பிள்களின் சுவை தனி. அதை விட ஆப்பிள் தோட்டத்திலேயே நாமே பறித்து சாப்பிடும் கனிகளின் சுவை அலாதியோ அலாதி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,914.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.