Show all

பார்வையாளர் ஒருவரின் ஹிந்தி ஆர்வத்திற்கு டாப்சி பதிலடி! அருமை டாப்சி.

கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்சி பன்னுவிடம், பார்வையாளர் ஒருவர் ஹிந்தியில் பேச வலியுறுத்த- அவரை வாயடைக்க வைத்த டாப்சியின் பதிலால் உற்சாகம் அடைந்த பார்வையாளர்கள் அனைவரும், அரங்கமே அதிர கைத்தட்டி டாப்சியின் பதிலை வரவேற்றுக் கொண்டாடினர்.

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை டாப்சி பன்னுவிடம் பார்வையாளர் ஒருவர் ஹிந்தியில் பேச வலியுறுத்தினர். அந்த பார்வையாளருக்கு பதிலளித்த டாப்சி பன்னு, நான் தென்னிந்திய நடிகையும்கூட அதனால், தமிழ் தெலுங்கில் பேசட்டுமா என்று கேட்டு அவரை வாயடைக்க வைத்தார்.

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் வந்து விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த 50வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் நடிகை டாப்சி பன்னுவும் கலந்துகொண்டு உரையாடினார். டாப்சி பன்னு பார்வையாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் பார்வையாளர்களில் இருந்து ஒருவர் டாப்சி பன்னுவிடம் ஹிந்தியில் பேச வலியுறுத்தினார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், நடிகை டாப்ஸி அந்த நபருக்கு, அனைவருக்கும் ஹிந்தி தெரியாது. நான் ஒரு தென்னிந்திய நடிகை அதனால் நான் தமிழ், தெலுங்கில் பேசட்டுமா? என்று கேள்வி எழுப்பி டாப்சி பன்னு அந்த நபரை வாயடைக்க வைத்தார்.

மேலும், தான் பேசுவது அதிகமானோருக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவதாக டாப்சி கூறினார். திரைப்படவிழாவில் டாப்சி பன்னுவின் பதில், பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்ததால், அனைவரும் கைத்தட்டி அவரைப் பாராட்டி அரங்கத்தை அதிரச் செய்தனர்.

இப்படி அனைவரும் பாராட்டும்படி நடிகை டாப்சி பன்னு பதில் அளித்த காணொளி இணையத்தில் தீயாகி வருகிறது. இந்த காணொளியைப் பார்க்கும் பலரும் டாப்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,346.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.