Show all

தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் சிக்கலில், எண்ணிமக் கட்டண உயர்வே மிகுந்த பாதிப்புக்குரியதாம்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகம் தற்போது பயங்கர சிக்கலில் உள்ளது. ஒருபக்கம் இணையவழித் திருட்டு பிரச்சனை, படம் வெளியீடு ஆன அன்றே இணையத்;தில் படம் வெளிவந்துவிடுகிறது, இன்னொரு பக்கம்  சமூக வலைதளக் கூலித் திறனாய்வாளர்கள். காசு கொடுக்காவிட்டால் இடைவேளையின் போதே படம் மொக்கை என்றும் காசு கொடுத்தால் அருமை என்றும் பதிவுகள் போட்டு வருகின்றனர், இந்த நிலையில் சரக்கு-சேவைவரி, எண்ணிம தொழில் நுட்பக் கட்டணங்கள் உயர்வு, திரையரங்குகளில் கட்டணம் உயர்வு, நடிகர்களின் சம்பள உயர்வு என திரைத்துறையே தற்போது தள்ளாட்டம் போட்டு வருகிறது

இந்த நிலையில் திரைத்துறைக்குச் சம்பந்தமே இல்லாத கார்ப்பரேட் எண்ணிம நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.1000 கோடி திரைத் துறையிலிருந்து சம்பாதித்துள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் துரைராஜ். 

அவர் கூறியதாவது: திரைப்படங்களை திரையிட வாரந்தோறும் சுமார் 9000ம் முதல் 12000ம் ரூபாய் வரை ஒவ்வொரு திரையரங்கிற்கும் பணம் செலுத்தியது எங்கள் தயாரிப்பாளர்களே. ஆண்டுக்கு தமிழ்நாட்டில், உள்ள 1100 திரையரங்குகளிலிருந்தும் 12 ஆண்டுகளில் சுமார் 600 கோடி பணத்தை கார்ப்பரேட் எண்ணிம நிறுவனங்கள் வருவாயாகப் பெற்றுள்ளன. அது மட்டுமில்லாமல்; விளம்பரம் திரையிடல் மூலம் 400 கோடி, ஆக 1000 கோடியை எங்கள் மூலம் சம்பாதித்த கார்ப்பரேட் எண்ணிம நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது அநியாயம், மனசாட்சிக்குப் புறம்பானது’ என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,724.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.