Show all

எதிர்பார்ப்பை நிறைவு செய்யாத அடார் லவ் படத்தின் அடுத்த பாடல்! கண்சிமிட்டல் மாணிக்க மலராயி பூவி மாதிரி

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓமர் லூலூ இயக்கத்தில் ரோஷன், பிரியா வாரியர், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கும் அடார் லவ் படத்தில், மாணிக்க மலராயி பூவி எனும் பாடல், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியர் நடித்திருக்கும் அந்தக் கண்சிமிட்டல், பலரை ரசிக்க வைத்தது. 

ஒரே நாளில் பல லட்சம் விருப்பங்களைக் குவித்து தலைப்பு ஆன அதே படத்திலிருந்து தற்போது வெளியாகியிருக்கும் 'ப்ரீக் பெண்ணே' என்னும் ராப் வகை பாடல் வெறுப்புகளை அதிகம் பெற்று தலைப்பில் இருக்கிறது. வெறுப்போர் அணியை தொடங்;கலாமா வேண்டாமா என்ற விவாதங்களும் போய்க்கொண்டிருக்கின்றன. 

இதற்குமுன், ஜஸ்ட்டின் பீபரின் 'பேபி' பாடல்தான் அதிக வெறுப்புகளைப் பெற்றிருந்தது. அதுவும் தற்போது விருப்பங்களால் முறியடிக்கப்பட்டுவிட்டது.

பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பாடல் பிடிக்காததற்கு என்ன காரணமாக இருக்கும்? எதிர்பார்ப்புதான்! 

படம் வருகிற கிறிஸ்துமசுக்கு பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

படக்குழுவினரே! தலைப்பானவர்கள் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். படத்தின் மீதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும் புரிந்து கொள்ளுங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.