Show all

மெர்சல் திரைப்படத்தின் மீது வழக்கு தொடரப் போவதாக தமிழிசை கடும் எச்சரிக்கை

இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், சரக்குமற்றும் சேவை வரி, எண்ணிம இந்தியா போன்ற நடுவண் அரசின் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நையாண்டி செய்யும் வசனங்கள் இடம் பிடித்துள்ளன.

‘எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்’ என்று கிழிந்த பர்சை வடிவேலு கதாப்பாத்திரம் காட்டுவது, '

‘என்ன இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா’ என்பது போன்ற வசனம் ஆகியவை மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூரில் சரக்குமற்றும்சேவை வரி குறைவாக இருப்பதாகவும், 28 விழுக்காடு சரக்குமற்றும்சேவை வரி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் விஜய் பஞ்ச் பேசும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன.

நடுவண் அரசு திட்டங்களுக்கு எதிராக காட்சிகள் உள்ளன என்று தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார்.

இதனிடையே சமூக ஊடகங்களில் விஜய் வசனத்திற்கு ஆதரவாக பகிரப்படுகின்றன.

நடுவண் அரசு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை எப்படித்தான் சொல்லுவது டுமீழிசை என்று சமூக வலைதள ஆர்வலர்கள் கிண்டலடிக்கிறார்கள் தமிழசையை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.