Show all

செயலலிதாவாக மாறும் கனவுஆசையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதைத் தலைவிகளில் ஒருவரான ஸ்ரத்தா ஸ்ரீநாத், செயலலிதா வாழ்க்கையைப் படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.

விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். திரையுலக அனுபவங்கள் குறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:

‘என் தந்தை ராணுவ அதிகாரி, அம்மா ஆசிரியை. நான் சட்டம் படித்து இருக்கிறேன். கல்லூரியில் படித்தபோதே திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அது கவர்ச்சியான உலகம் என்று பெற்றோர் பயந்தனர். பின்னர் அவர்களைச் சம்மதிக்க வைத்து நடிக்க ஆரம்பித்தேன்.

நான் மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவள். அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன். அவர் படத்தில் நடித்ததை பெரிய வரமாகக் கருதுகிறேன்.

விக்ரம் வேதா படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்தது. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். தலைக்கனம் கிடையாது. சுய கட்டுப்பாடு, சுய கவுரவத்துடன் எல்லோரும் இருக்க வேண்டும். தமிழக ரசிகர்கள் என்னை தமிழ் பெண் மாதிரி பார்க்கிறார்கள்.

தமிழ்த்; திரையுலகம் நன்றாக முன்னேறி இருக்கிறது. இங்குள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைத்து மொழி பட உலகிலும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். என்னை எவ்வளவு காலம் ரசிகர்கள் திரையில் பார்க்க விரும்புகிறார்களோ அதுவரை நடித்துக்கொண்டு இருப்பேன்.

எனது லட்சிய கதாபாத்திரம் என்பது செயலலிதா வேடத்தில் நடிப்பது. யாராவது செயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நடிகையாக வாழ்க்கையை தொடங்கி முதல்-அமைச்சராகி உயர்ந்த இடத்துக்கு சென்றவர் அவர். அவரது வாழ்க்கையும், சாதனைகளும் எனக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது.

அந்த அசுர முயற்சிக்கு யார் தயார் என்று தெரியவில்லையே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.