Show all

ஸ்ரேயாவின், காயத்ரி தெலுங்குப் படம் திரைக்கு வந்த அன்றே இணையத்திலும் வெளியானது

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கில் ஸ்ரேயா, மஞ்சு விஷ்ணு நடித்துள்ள ‘காயத்ரி படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்த அதே நாளில் இணையதளங்களிலும் வெளியாகி விட்டது. ஒரு இணையதளத்தில் 2 லட்சம் பேரும், இன்னொரு தளத்தில் 75 ஆயிரம் பேரும் இந்த படத்தை பார்த்துள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படத்தை தயாரித்துள்ள நடிகர் மோகன்பாபு கூறியதாவது:

நான் சிரமப்பட்டு காயத்ரி படத்தை தயாரித்தேன். கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 8 மாதம் படத்துக்காக உழைத்தேன். ஆனால் படம் திரைக்கு வந்த அன்றே இணையதளத்தில் வெளியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. எந்தத் திரையரங்கில் இதை திருட்டுத்தனமாக பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை.

இந்தப் படத்தை நான் வியாபாரம் செய்துவிட்டேன். ஆனாலும் இணையதளத்தில் வெளியானதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. என்று தனது வேதனையை வெளிப்;படுத்தினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.