Show all

நடிகர் சிம்பு படத்தின் மேம்பாட்டுத் தகவலை வெளியிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன்! மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பை எதிர்ப்பார்த்து சிம்பு கொண்டாடிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் சிம்பு படத்தின் மேம்பாட்டை பேரறிமுக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிம்பு அடுத்து சில படங்களில் வேலையாக இருந்து வருகிறார். முன்பு சிம்பு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி தற்போது அவர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏர்.ஆர்.இரகுமான் இசையமைப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு அடுத்ததாக 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் 21,தை (பிப்ரவரி 3) அன்று சிம்பு படம் குறித்த முக்கிய மேம்பாட்டை வெளியிட உள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவு 'பத்து தல' படத்தின் மேம்பாடாக இருக்குமா அல்லது வேறு எதேனும் சிம்புவின் புதுப்பட அறிவிப்பா என அவருடைய கொண்டாடிகள்  குழம்பியுள்ளனர்.

பத்து தல படத்தில் சிம்புவுடன், கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பை எதிர்ப்பார்த்து சிம்பு கொண்டாடிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,141.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.