Show all

தேவை; உண்மையறியும் சோதனை! திருமண ஆசையில் விழுந்தாரா ரசிகர்- இயல்பானவர்தானா டாப்சி

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீச்சுவில், தனது காதல் வாழ்க்கை மற்றும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றி டாப்ஸி குறிப்பிடும்போது, 'பொய் பேசாதவராக இருக்கவேண்டும்' என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் தெரிவித்திருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட  ரசிகர் ஒருவர் டாப்ஸிக்கு அவரது கீச்சுப்  பக்கத்திலேயே தன்னைப்பற்றி விவரித்து திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஹலோ டாப்ஸி, உங்களை நான் காதலிக்கிறேன். என்னை மணந்துகொண்டு என் வாழ்நாள் துணைவியாக நீங்கள் இருப்பீர்களா? நான் கற்பு நெறி தவறாத ஆண்மகன், குடிப்பழக்கம் கிடையாது, சைவ உணவுதான் சாப்பிடுவேன். இதெல்லாம் உண்மையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக உண்மை கண்டறியும் பரிசோதனையான நார்கோ சோதனைக்கும், பிரைன் மேப்பிங் சோதனைக்கும் நான் தயார்' என அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் வேறுசில ரசிகர்களோ, திருமணத்துக்கு விண்ணப்பம் போட்ட நபரை கலாய்த்திருக்கின்றனர். கீச்சுவில் திருமணத்துக்கு டாப்சியை முன்மொழிந்த அந்த நபருக்கு கண்டிப்பாக பிரைன் மேப்பிங் சோதனை செய்தாக வேண்டும்' என கிண்டல் செய்துள்ளனர். 

மற்றொரு ரசிகரோ, 'அந்த நபரை நீங்கள் திருமணம் செய்வீர்களா? மாட்டீர்களா? என டாப்ஸியிடமே கேட்டிருக்கிறார். ரசிகர்களின் இந்த கீச்சுத் தகவல்களை பகிர்ந்திருக்கும் டாப்ஸி,'வாழ்க்கையில்  உங்களுக்கு (விண்ணப்பம்போட்ட ரசிகர்) இதைவிட வேறென்ன வேண்டும்' என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் திருமணம் செய்வீர்களா என்றகேள்விக்கு  பதில் சொல்லாமல் தாவியிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,737.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.