Show all

பாவம் ரஜினி! அவர் இரசிகர்கள் அதைவிடப் பாவம்; படத்தில் கூட அரசியல் வேண்டாவாம் இனி

03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் தோல்வி, பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று ஒருசில விநியோகிஸ்தர்கள் பிரச்சனையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று தொடக்கத்திலேயே கூறிவிட்டார்.

காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் ரஜினிக்கு எதிர்மறையாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது. 

கட்சி தொடங்குகிறேன், கட்சி தொடங்குகிறேன் நம்மை அலைகழித்து விட்டு தற்போது படத்தில் கூட அரசியல் வேண்டாம் என்கிறாரே ரஜினி என்று ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,821.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.