Show all

வரிவிதிப்பில் ஏட்டிக்குப் போட்டி அமெரிக்காவும் இந்தியாவும்

03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்னிய நாட்டுப் பொருள்களின் பயன்பாட்டை குறைப்பது அந்தந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கானதுதான் என்பதில் எந்த நாட்டிற்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

அந்த முயற்சிகளை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டுமேயொழிய ஏட்டிக்குப் போட்டியாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முன்னெடுப்பது தேர்தல் அரசியலுக்கானதேயன்றி, நாட்டின் முன்னேற்றத்திற்காக இருக்க முடியாது.

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், பாதாம், ஆப்பிள்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளதாம்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 விழுக்காடு, அலுமினியத்திற்கு 10 விழுக்காடு வரி விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 800 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 50 விழுக்காடும், பாதாம் பருப்பிற்கு 20 விழுக்காடும், வால்நட்களுக்கு 20 விழுக்காடும், ஆப்பிள்களுக்கு 25 விழுக்காடும் வரி விதித்து நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது. இது வரும் வெள்ளி முதல் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு வரி உயர்வு குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,821.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.