Show all

அரசியல்வாதி, நடிகர். ஜே.கே.ரித்திஷ் காலமானார்! குறைந்த காலத்தில் மிகுந்த புகழ் ஈட்டியவர்

ஜே.கே.ரித்திசின் இறப்பு குறித்த தனது சமூகவலைதள பதிவில், வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி
 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுகவின் ராமநாதபுர மாவட்டச் செயலாளராக இருந்த சுப.தங்கவேலனின் பேரன் ஜே.கே.ரித்திஷ். திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
திமுகவில் இருந்த ஜே.கே.ரித்திஷ் அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். பின்னர், திமுகவிலிருந்து விலகிய ஜே.கே.ரித்திஷ், அதிமுகவில் இணைந்தார். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எல்.கே.ஜி. படத்தில் முதன்மை வேடமேற்று நடித்திருந்தார்.
அரசியல் மட்டுமல்லாது, திரைத்துறை வட்டாரத்திலும் பிரபலமானவராகச் செயல்பட்டு வந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். அண்;மையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போடப்பட்ட விவகாரத்தில், விசால் அணிக்கு எதிரணியில் முதன்மை நபராக ஜே.கே.ரித்திஷ் செயல்பட்டார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நேற்று காலை கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்த ஜே.கே.ரித்தீசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கீச்சுவில் கருத்து பதிவிட்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, 'ஜே.கே. ரித்தீசின் திடீர் இறப்பால் அதிர்ச்சியடைந்து நொறுங்கிவிட்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு அகவை 46 தான் ஆகிறது. இவ்வளவு சிறு அகவையிலா மரணம்? அவர் எனக்கு சகோதரர் போன்றவர். பலரது வாழ்க்கையை மாற்ற உதவியவர். வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை' என்று கூறியுள்ளார்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.