Show all

எதிர்பார்ப்பில் பிரபுதேவா படங்கள்!

மை டியர் பூதம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் விளம்பர ஒட்டியை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமையுடன் இருக்கும் பிரபுதேவா வேறுபாடான கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். 

பொய்க்கால் குதிரை என்ற படத்தில் ஒற்றைக்காலுடன் நடிக்கிறார் பிரபுதேவா. ஒரு உண்மையான கால் மற்றும் ஒரு செயற்கை காலுடன் இருக்கும் பிரபுதேவாவின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

 
பொன் மாணிக்கவேல் படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில், தேள், யங் மங் சங், பஹிரா உள்ளிட்ட பல படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் மை டியர் பூதம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் விளம்பர ஒட்டியை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விளம்பர ஒட்டி மிகுதியான விருப்பம் பெற்றும் பகிரப்பட்டும் வருகிறது. 

மை டியர் பூதம் படத்தை ராகவன் இயக்குகிறார். இதில் கதைத்தலைவியாக இரம்யா நம்பீசன் நடிக்கிறார். பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் படம் அண்மையில் எண்ணிமத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருந்த தேள் படம் சில சிக்கல்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. யங் மங் சங், பஹிரா' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.