Show all

லிப்ட் புதிய படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது! கவின் கதைத்தலைவன், அம்ரிதா ஐயர் கதைத்தலைவி

கவின் நடிக்கும் லிப்ட் புதிய படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதைத்தலைவியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூகத்தில் இருந்து வந்திருந்த கொஞ்சம் நஞ்சம் மரியாதையையும் கெடுத்துக் கொண்டவர்கள்தாம் அதிகம் என்பதான, ஒரு நிகழ்ச்சிதான் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி. அந்த வகையில் தனது மரியாதையைக் கெடுத்துக் கொண்டு கொஞ்சம் வருமானத்தோடு வெளியேறிவர்தான் சின்னத்திரை நாடகங்களில் கொண்டாடிகளைக் கவர்ந்து வந்த கவின்.

நடிகர் கவின், தற்போது ‘லிப்ட்’ என்ற புதிய படத்தில் கதைத்தலைவனாக நடிக்க இருக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரபிரசாத் இப்படத்தை இயக்குகிறார். 

கவின் நடிக்கும் இந்தப் புதிய படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதைத்தலைவியாக நடித்துள்ளார். இவர்கள் இணையும் இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.