Show all

உலகம் முழுவதும் துடுப்பாட்ட விளையாட்டுக்கு ஒரு மாதம் விடுமுறை! கரோனா அச்சுறுத்தல் காரணம்

கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டி ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. 

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டி ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாமல் இதர துடுப்பாட்ட வீரர்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதையடுத்து துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டியும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீரர்கள், கொண்டாடிகள் ஆகியோரின் நலன் கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு இந்த ஒரு மாதகாலம் நுழைவுஅனுமதி வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சர்வதேச துடுப்பாட்ட வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது. துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டி இந்த ஒரு மாத விடுமுறைக்குப் பிறகும் தொடங்க முடியாமல் போனால் துடுப்பாட்ட  வீரர்களின் விடுமுறைக் காலம் மேலும் அதிகமாகும் எனத் தெரிகிறது. 

இதனால் சர்வதேச துடுப்பாட்டத் தொடர்கள், துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டி என அடுத்த ஒரு மாதத்துக்கு உள்ளூர், சர்வதேச ஆட்டங்கள் எதுவும் நடைபெறாது. துடுப்பாட்ட விளையாட்டையும் துடுப்பாட்ட வீரர்களையும் கண்டுகளிக்க துடுப்பாட்டக் கொண்டாடிகள் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்கவேண்டிய நிலைமை தற்போது உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.