Show all

பேரண்டப் பேரழகி பட்டம்! இருபத்தியோரு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்தியாவுக்கு பெற்றுத் தந்தவர் ஹர்னாஸ் சந்து

பேரண்டப் பேரழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த எழுபது ஆண்டுகளாக நடந்து வரும் பேரண்டப் பேரழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.

இருபத்தியோர் அகவையுள்ள, பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் கலைமுதுவர் பட்டத்திற்குப் படித்து வருகிறார். 

இருபத்தியோரு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பேரண்டப் பேரழகி பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் இந்தியாவிற்காக லாரா தத்தா பேரண்டப் பேரழகிப் பட்டத்தை வென்றிருந்தார்.

இந்தப்பட்டம் தனக்குக் கிடைப்பதற்கு தமது பெற்றோர், தான் வணங்கும் தெய்வம் மற்றும் அழகி இந்தியா அமைப்புக்கு தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.

எலியட் நகரில் நடந்த இந்தப் பேரண்டப் பேரழகிப் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, பிரான்ஸ், இத்தாலி,இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இநதப் பேரண்டப் பேரழகிப் (மிஸ் யூனிவர்ஸ) போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் ஹர்னாஸ் சந்து. 

இதில், பராகுவேயின் நாடியா ஃபெரீரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நடப்பு ஆண்டுக்கான பேரண்ட பேரழகிக்கான மகுடத்தை ஹர்னாஸ் சந்து வென்றார். இவருக்கு கடந்த ஆண்டுக்கான முன்னாள் பேரண்டப் பேரழகியும் மெக்சிகோவைச் சேர்ந்தவருமான ஆண்ட்ரியா மெசா மகுடத்தைச் சந்துவுக்கு வழங்கினார்.

ஹர்னாஸ் சந்து யார தியான் பூ பரன், மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அழகி போட்டிகளில் விருதை குவித்து வரும் இவர் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.