Show all

வலையொளி சாதனைகளை சல்லிசல்லியாக தகர்த்தெறிந்த மெர்சல் விளம்பரக்காணொளி

படத்தின் விளம்பரக்காணொளி நேற்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீச்சுவில் இந்திய அளவில் முதன்மைப் படுத்தினர் கீச்சு பயனாளிகள். விளம்பரக்காணொளி வெளியாகி சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கத் தெடங்கினர். விஜய் மூன்று பாணிகளில் வரும் காட்சிகளும் இந்த விளம்பரக்காணொளியில் இடம்பெற்றிருக்கின்றன. ரசிகர்களின் பெருத்த ஆதரவைப் பெற்று சாதனை படைத்துவருகிறது ‘மெர்சல்’ விளம்பரக்காணொளி.

வெளியானது முதலே வலையொளி விளம்பரக்காணொளிகளில் ஒவ்வொரு சாதனையாக முறியடித்துக்கொண்டே இருந்தது மெர்சல் விளம்பரக்காணொளி.

விளம்பரக்காணொளி வெளியாகி 90-வது நொடியிலேயே 25,000 விருப்பங்களைப் பெற்று புதிய உலக சாதனைக்கான முதல் அடியை எடுத்து வைத்தது மெர்சல் விளம்பரக்காணொளி.

வெளியான 10 நிமிடத்தில் ஒரு இலட்சம் விருப்பங்களைக் கடந்து சாதனை படைத்தது. விஜய் ரசிகர்கள் குவித்த விருப்பங்களால் 100 நிமிடத்தில் 5இலட்சம் விருப்பங்களை எட்டிப் பிடித்தது விளம்பரக்காணொளி.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளியாகி உலக அளவில் சாதனை படைத்து முதலிடத்தில் இருந்த விவேகம் விளம்பரக்காணொளியின் 5,98,000 விருப்பங்களையும், உலக சாதனையை 4 மணி நேரத்தில் 5,99,000 விருப்பங்கள் பெற்று முறியடித்து உலகிலேயே அதிக விருப்பங்கள் பெற்ற விளம்பரக்காணொளியாக சாதனை படைத்தது ‘மெர்சல்’.

7 மணி நேரத்தில் 65 லட்சம் காண்போரைப் பெற்று மற்றுமொரு சாதனையையும் படைத்தது. இதற்கு முன் விவேகம் 12 மணி நேரத்தில் 50 லட்சம் பெற்றதே சாதனையாக இருந்தது. 12 மணி நேரத்திற்குள் 80 லட்சத்தைக் கடந்துவிட்டது மெர்சல் விளம்பரக்காணொளி.

மெர்சல் விளம்பரக்காணொளி உலக அளவில் குறைந்த நேரத்தில் அதிக விருப்பங்களைப் பெற்ற விளம்பரக்காணொளி என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

இந்தச் சாதனை ஹாலிவுட் படங்களே இதுவரை பெற்றிராத சாதனையாக அமைந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.