Show all

வெள்ளியன்று வெளியாகிறது! நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேசு நடித்த நடிகையர் திலகம்

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். 

வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வருகிற வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.