Show all

கூகுள்உதவி! சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வரும் சுந்தர் பிச்சை வெளியிட்ட வியப்புக் காணொளி

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கூகுளின் வெளியீடுகளில் ஒன்றான 'கூகுள்உதவி' இல் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றங்கள் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது மக்களுக்கு உதவி செய்வதற்கான 'கூகுள்உதவி' பிறருக்கு அழைப்பு செய்து பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. நேற்று அமெரிக்காவில் நடந்த கூகுள் பட்டறைதான் தற்போது தொழில் நுட்ப உலகில் தீப்பரவல். 

இந்தப் பட்டறையில் கூகுள் பல தலையாயத்துவமான அதிரடி முடிவுகளை அறிவித்தது. ஆனால் எல்லாவற்றையும் விட மக்களை அதிகம் கவர்ந்தது 'கூகுள்உதவி' இல் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றம்தான். பயனாளிகளுக்காக, அதுவே மக்களுக்கு அழைப்பு செய்து பேசும் வசதியை கொண்டு உள்ளது. இதன் செயல்பாடு மிகவும் அதிசயப்பட வைக்கும் அளவில் உள்ளது.

இந்த 'கூகுள்உதவி' வந்து பல நாட்கள் ஆகி இருந்தாலும் மக்கள் இடத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. சில தோல்வி அடைந்த கூகுள் வெளியீடுகள், தயாரிப்புகள் போல மக்கள் இதையும் சில நாட்கள் பயன்படுத்திவிட்டு பின் நீக்;கம் செய்துவிட்டார்கள். இது தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஆனால் கூகுள் வைத்து இருந்த திட்டமே வேறு என்று இப்போதுதான் தெரிகிறது.

தற்போது இருக்கும் 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் மூலம் என்ன விசயங்கள் எல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் இதன் மூலம் செய்ய வைக்க வேண்டும் என்று கூகுள் இவ்வளவு நாள் உழைத்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனம், கூகுள் டியூப்லெக்ஸ் என்று தனி குழுவையே உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்துள்ளது. 

தற்போது வர இருக்கும் 'கூகுள்உதவி' தரவேற்றத்தில் உள்ள 'செயற்கை நுண்ணறிவு' அப்படியே மனிதர் போலவே சிந்திக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இதற்காக அந்த 'செயற்கை நுண்ணறிவு' க்கு தனி குரல், யோசிக்கும் திறன், மனிதர் எப்படி செயல்படுவார்கள் என்பதை எல்லாம் கற்றுக்கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இந்த புதிய தரவேற்றம் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். 

உதாரணமாக நேற்று நடந்த கூகுள் பட்டறை நிகழ்வில், கூகுளின் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இதை பற்றி எடுத்துரைத்தார். அவர் வெளியிட்ட காணொளியில், 'கூகுள்உதவி' மூலம் ஒரு முடிதிருத்தகத்திற்கு அழைப்பு செய்து முன்பதிவு செய்துள்ளனர். அதில் இந்த 'கூகுள்உதவி' அப்படியே மனித குரலில் மனிதர்கள் போலவே பேசி உள்ளது பின் முன்பதிவு செய்துள்ளது. மனிதர்கள் எந்த நேரத்தில் எப்படி குரலை மாற்றுவார்கள், கடைசி நேரத்தில் எப்படி திடீர் முடிவு எடுப்பார்கள் என்று இது யோசித்து பேசியுள்ளது. இந்தக் காணொளி தற்போது தீப்பரவல் ஆகியுள்ளது. காணொளியை https://www.theverge.com/2018/5/8/17332070/google-assistant-makes-phone-call-demo-duplex-io-2018 இணைப்பில் காணலாம்;.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.