Show all

சமூக வலைதளமான சுட்டுரையில் நடிகர் கமல்ஹாசன் தன்னை இணைத்துக் கொண்டார்

 

     சமூக வலைதளமான சுட்டுரையில் நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர். மேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு வரை அதிகரித்துகொண்டே சென்றது.

 

  இசையமைப்பாளர் இளையராஜா இசையில், தேசிய கீதத்தை கமல்ஹாசனே பாடி பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

 கமல்ஹாசனின் வருகையை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வரவேற்று, கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.

 

சுட்டுரை நிகழ்வுகளில் மகிழ்ச்சியான தருணங்களில் இன்று (ஜன. 26) முக்கியமானதாகும். எனது மதிப்புமிக்க நபர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். ஐ லவ் யூ அப்பா என்று ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் சுட்டுரையில் கமல் இணைந்த நிலையில், இரவு 11 மணி வரை 20,700 பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். நொடிக்கு நொடி அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது.

 

குடியரசு நாளன்று கமல்ஹாசன் சுட்டுரையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.