Show all

சார்லி சாப்ளின் 2ல், ஆடி அசத்தியிருக்கிறார் பிரபுதேவா! 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடலுக்கு

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்ரீஷ் இசையில் தற்போது உருவாகி வரும் படம், சார்லி சாப்ளின் 2. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் ஆண்;மையில் வெளியானது. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடல் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. வலையொளியில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள்.

இது பற்றிய மகிழ்ச்சியை இதழியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். டி.சிவா பேசும் போது:

இந்தப் பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது மிகுந்த வெற்றி பெறும் என்று அவர்களிடம் பேசி உரிமை வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்தப் பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம். இயக்குனர் ஷக்திசிதம்பரம் பேசும் போது:

அம்ரீஷ் நல்ல இசைஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும் என்றார். இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது:

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், பிரபுதேவா ஆகியோருக்கும் இந்தப் பாடலை கீச்சு மூலம் மேலும் பிரபலமாக்கிய தனு{க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பிரபு தேவா எவ்வளவோ இசைக்கு விதவிதமான நடனம் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன். எனக்கான ஒரு இடம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா மூலம் சார்லி சாப்ளின் 2 எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.

மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது பெரியமகிழ்ச்சி. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சமூக வலைதளத்திலும் முதல் இடத்தை பிடித்து சாதனையில் இருக்கிறது என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி என்றார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,915.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.