Show all

எந்திரன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்புச் செலவு 350 கோடி ரூபாய் வரை ஆகுமாம்

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்வெள்ளம்குமார் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ் கரன் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

படத்தின் பட்ஜெட் குறித்து இப்போது தெரியவில்லை. ஆனால் எப்படியும் 350 கோடி ரூபாய் வரை ஆகும் என்று எண்ணுகிறோம். ரஜினி மற்றும் அக்ஷய் குமாரால் நல்ல வசூல் ஆகும் என்று நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.